‘Man vs Wild’ – ரஜினிகாந்த் கலந்து கொண்டது ஏன் ?

0
44

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திடீரென டிஸ்கவரியில் நடக்கும் ‘Man vs Wild’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒட்டு மொத்த இந்தியர்களின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக வாக்கு கொடுத்த பின்னர், அதிலிருந்து இன்று வரை பின்வாங்கும் ரஜினியின் இந்த ஆர்வம் எதன் பக்கம் போகிறது என்ற கேள்வியும் எழுகிறது.

அதேசமயம், ரஜினி ஒரு படம் முடித்து அதற்கு இடைவேளி ஏதும் கொடுக்காமல் அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டே இருக்கிறார்.

தனக்கான சினிமா ஓய்வை ரஜினி அறிவித்துவிட்டு அரசியல் வேட்டையை எப்போது ஆரம்பிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற இந்த சமயம், டிஸ்வரி பக்கம் திரும்பியது ரஜினியின் இயற்கை மீதான ஆர்வத்தை காட்டுகிறதா ? அல்லது பிரதமர் மோடி மாதிரி சுற்றுலா ஆசையை காட்டுகிறதா ? என்ற கேள்விகள் விடைகள் தெரியாத புதிர்களே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here