அழகோவியம் … ஓவியராக மாறிய குற்றம் 23 நாயகி மகிமா !

0
20

குற்றம் 23 படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை மகிமா நம்பியார், புரியாத புதிர், கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, மகாமுனி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருக்கிறார்.

இந்த ஓய்வை நடிகர்-நடிகைகள் பலரும் உடற்பயிற்சி, யோகா, புத்தகம் படித்தல், ஆன்-லைன் வகுப்புகளில் சேர்ந்து படிப்பது என்று ஆக்கப்பூர்வமாக செலவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மகிமா, ஓவியராக மாறி இருக்கிறார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியத்தில் ஆர்வம் இருந்துள்ளது.

சினிமாவுக்கு வந்து ஓய்வில்லாமல் நடித்ததால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை. தற்போது ஊரடங்கு விடுமுறையை ஓவியம் வரைய பயன்படுத்துகிறார்.

தனது வீட்டின் சுவர்களில் ஓவியங்கள் வரையும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறும்போது, “தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதை பயன்படுத்தி ஓவியங்கள் வரைகிறேன். நீங்களும் ஓவியராக மாற ஒரு சுவர், ஒரு பென்சில் பாராட்டுவதற்கு ஒரு அம்மா இருந்தால் போதும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here