காதல் கிசு கிசு : மனம் திறந்தார் ப்ரியா பவானி சங்கர்

0
24

தமிழ் சினிமாவில் மேயாத மான் படத்தில் அறிமுகமாகி இன்று இந்தியன் 2 படம் வரையிலும் வாய்ப்புகளை குவித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.

ஆனால், அவரையும் காதல் கிசு கிசு விட வில்லை போல, சமீபத்தில் வயது மூப்பு காரணமாக எஸ்.ஜே.சூர்யாவின் காதலை நிராகரித்ததாக கூறியதாக ஒரு தகவல்.

இதை அப்போது எஸ்.ஜே.சூரியா மறுத்தாலும் பிரியா வாய் திறக்க வில்லை.

தற்போது இதுகுறித்து பிரியா பவானி சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:- “எஸ்.ஜே சூர்யாவையும், என்னையும் பற்றி வெளியான வதந்திக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் எஸ்.ஜே சூர்யாதான் பதற்றமாகி பதில் சொல்லி விட்டார். அதனாலேயே இந்த விஷயத்தை பெரிதாக பேசினர். நிஜத்தில் எங்களுக்குள் அப்படி எதுவும் கிடையாது.

கிசுகிசுக்களை பார்த்து எனது நண்பர்கள் கேலி செய்வார்கள். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்ற கவலை மட்டுமே எனக்குள் இருந்தது” என்று பிரியா பவானி சங்கர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here