கமல் போஸ்டரில் சாணி அடித்தேன்.. மேடையில் கூறியதற்கு லாரன்ஸ் விளக்கம்

0
35

நடிகர் ராகவா லாரன்ஸ் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் நேற்று நடந்த தர்பார் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போதே சர்ச்சையாக பல விஷயங்கள் கூறினார்.

தான் சின்ன வயதில் கமல்ஹாசன் போஸ்டர் மீது சாணி நடித்திருக்கிறேன் என கூறினார். இது சமூக வலைத்தளங்களில் பெரிய சர்ச்சையாக வெடிக்க அவர் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார்.

‘நான் சின்ன வயதில் தெரியாமல் ரஜினி ரசிகராக இப்படி கமல் போஸ்டர் மீது சாணி அடித்தேன். நான் பேசிய முழு விடியோவை கேளுங்கள். கமல் மீது எனக்கு அதிக மரியாதை உள்ளது. நான் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால் நான் தவறாக எதுவும் பேசவே இல்லை” என கூறியுள்ளார் லாரன்ஸ்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here