லாரன்ஸ் அறக்கட்டளை பெயரில் தில்லுமுல்லு

0
20

நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றத்தின் பொதுச் செயலாளர் சங்கர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: ராகவா லாரன்ஸ் பெயருக்கும், புகழுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இணையதளம் மூலமாக போலியான ஐ.டி.யை பதிவு செய்துள்ளனர்.

நான் தான் ராகவா லாரன்ஸ் என்று தவறான முறையில் பணம் வசூல் செய்துள்ளனர்.

வீடு கட்டி தருவதாக கூறி பெங்களூர், சேலம், ஊட்டி, ராமநாதபுரம், கொளத்தூர் (சென்னை), வடபழனி போன்ற இடத்தில் இதுபோன்ற தவறுகளை செய்து வருகின்றார்கள்.

அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் மர்ம நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொதுமக்களும், ரசிகர்களும் உதவி செய்ய வேண்டும் என்றால் உண்மையான ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையை அணுகவும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here