மூன்று கோடி நிதி.. சந்திரமுகி இரண்டாம் பாகம் – அசத்தும் லாரன்ஸ்!

0
66

நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்தை பி.வாசு இயக்குகிறார்.

இந்நிலையில், சந்திரமுகி-2 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதை அறிவித்துள்ள லாரன்ஸ், கொரோனா நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாயை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

படத்திற்காக தான் பெறும் முன்பணத்தில் ரூ. 3 கோடியை கொரோனா நிவாரண நிதிக்கு அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதில் 50 லட்சம் ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கும், 50 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கும், பெப்ஃ சி தொழிலாளர் சங்கத்திற்கு 50 லட்சத்தையும் அவர் அளிக்கவுள்ளார்.

மேலும் 25 லட்சத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும், 75 லட்சத்தை தினசரி தொழிலாளர்கள் மற்றும் ராயபுரம் மக்களுக்கும் அவர் அளிக்க இருக்கிறார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here