தலைவர் 168 – புதிய அப்டேட்டால் குழம்பிய ரசிகர்கள்

0
40

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

தர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

தலைவர் 168 என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தில் நயன்தாரா இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, ரஜினிக்கு ஜோடி யார் என நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இப்பொழுது நயன்தாரா இணைந்துள்ளது குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here