குற்றம் 23 இயக்குனருடன் மீண்டும் இணையும் அருண்விஜய்

0
52

பிரபல இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அறிவழகன். ஈரம் படத்தின் மூலம் வெற்றி இயக்குனராக அறிமுகமான இவர், அருண்விஜய்யை வைத்து இயக்கிய ‘குற்றம் 23’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில் அருண்விஜய்-அறிவழகன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இந்த தகவலை அருண்விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி  செய்துள்ளளார்.

சமீபத்தில் அருண்விஜய்யின் ‘மாஃபியா’ திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து சினம், பாக்ஸர் ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பின் அறிவழகன் இயக்கும் படத்தில் அருண்விஜய் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here