கே.எஸ்.ஆர் இயக்கத்தில் அஜித் ? தகவல் உண்மையா ?

0
49

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் அஜித் நடிக்கும் 61 வது படத்தை இயக்குவது குறித்த தகவலுக்கு பதிலளித்துள்ளார்.

அன்புள்ள நண்பர்களே, ரசிகர்களே, ஊடக மற்றும் சினிமா தோழர்களே, சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் திரு.அஜித்குமார் நடிக்கப்போகும் அடுத்த படத்தை நான் இயக்கவிருப்பதாக, நேற்றிலிருந்து ஒரு புரளி பரவிக் கொண்டிருக்கிறது. இது நிச்சயமாக தவறான செய்தி. அது புரளி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் எனது பெயரில் இயங்கும் ட்விட்டர் கணக்கு போலியானது. எனக்கு ட்விட்டரில் கணக்கு இல்லை. யாரும் குறிப்பிட்ட போலி கணக்கை ஆதரிக்க வேண்டாம். என்றென்றும் நன்றியுடன்.. கே எஸ் ரவிக்குமார்”.

தமிழ்சினிமாவில் அஜித் குமார் நிறைய தோல்விகளை சந்தித்த நேரம் வரலாறு, வில்லன் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து அவரை துாக்கி விட்ட பெருமை ரவிக்குமாரைச் சேரும்.

இன்றைநிலையில் ரவிக்குமாரின் கேரியர் சற்றே தொய்வடைந்துள்ள நிலையில் அஜித்குமார் ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்றே பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here