விக்ரமுக்கு நன்றி கூறிய ஜெமினி பட நடிகை!

0
29

விக்ரம் நடிப்பில், சரண் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான ஜெமினி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது. பரத்வாஜ் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாயின. குறிப்பாக ‘ஓ போடு’ பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் ஜெமினி வெளியாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதுகுறித்து படத்தின் ஹீரோயின் கிரண் ட்வீட் செய்துள்ளார்.

அதில் ‘எனது முதல் படம் ஜெமினி. 18 வருடங்கள் கடந்துவிட்டது. நன்றி விக்ரம் சார்’ என குறிப்பிட்டுள்ளார்.

ஜெமினி வெளியான அதே ஆண்டு தெலுங்கில் ரீமேக் ஆனது. வெங்கடேஷ், நமிதா ஆகியோர் இதில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here