வரலாற்று திரைப்படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

0
41

மோகன்லாலுடன் அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்ற சரித்திர கதையம்சம் கொண்ட படமொன்றில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவரது தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர்.

இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்கார் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார்.

அவரது வாழ்க்கையை மையமாக வைத்தே இந்த படம் தயாராகிறது.

இதில் குஞ்சலி மரைக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார்.

ரூ.100 கோடி செலவில் தயாராகும் இந்த படத்தை பிரியதர்ஷன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை மார்ச் மாதம் 26-ந்தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட இருப்பதாக கூறப்படுகிறது.

மகாநதி படத்தைபோல் இதுவும் தனக்கு பெயர் வாங்கி கொடுக்கும் என்று கீர்த்தி சுரேஷ் எதிர்பார்க்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here