பிரபல இயக்குனர் படத்திலிருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்

0
38

மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் திரைப்படமாக இயக்குகிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இந்நிலையில், குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட கீர்த்தி சுரேஷ், தற்போது இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த்- சிவா கூட்டணியில் உருவாகும் தலைவர் 168 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷ், கால்ஷீட் பிரச்சனை காரணமாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here