கீர்த்தி சுரேஷ் வெற்றிக்கு பின்னணி இதுதான் !

0
18

சினிமா என்பது எல்லோரும் சேர்ந்து ஒரே எண்ணத்துடன் உழைக்க வேண்டும். அப்பொழுது தான் ஜெயிக்க முடியும் என்று கீர்த்தி சுரேஷ் கூறுகிறார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் கீர்த்தி, எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர்.

ஒவ்வொருவரும் விருப்பமான தொழிலை தேர்வு செய்து கொள்ள வேண்டும். எனக்கு உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரங்களை விரும்பி செய்கிறேன். அதுமாதிரி வேடங்களை எதிர்பார்க்கிறேன். தமிழ், தெலுங்கு சினிமாவில் திறமையான நடிகை என்று பெயர் வாங்கி விட்டேன். நிலையான இடமும் கிடைத்து இருக்கிறது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் சிறப்பாக நடித்து கொடுப்பார் என்ற பெயரும் வாங்கி இருக்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் தேர்வு செய்யும் படங்களில் யார் வேலை செய்கிறார்கள். கதை என்ன எனது கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது உள்பட எல்லா விஷயங்களையும் கவனமாக கேட்ட பிறகே ஒப்புக்கொள்கிறேன்
என்கிறார் கீர்த்தி சுரேஷ்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here