இயக்குனர் ஷங்கரின் ஸ்டைலை ஃபாலோ பண்ணும் கார்த்திக் சுப்புராஜ்

0
28

தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த அசோக் வீரப்பன் என்பவருக்கு வாய்ப்பளித்து அவர் இயக்கும் படத்தை தயாரிக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்திற்கு பின்பு, தனுஷ் நடித்திருக்கும் படத்தை இயக்கியிருக்கிறார்.

ஒய்நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸ் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஒரு படமும், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஒரு படமும் உருவாகி வருகிறது.
மேலும் ஒரு புதிய படத்தில் வைபவ் கதாநாயகனாகவும், நட்பே துணை பட நடிகை அனகா கதாநாயகியாகவும் நடிக்க இருக்கிறார்கள்.

இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குனராக இருந்த அசோக் வீரப்பன் இயக்க இருக்கிறார்.

தன் உதவியாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ஸ்டைலில் ஒன்று. தன்னுடைய S பிக்சர்ஸ் மூலம் வசந்தபாலனுக்கு வாய்ப்பு அளித்து வெயில் படத்தை இயக்க வைத்தார். அவரது ஸ்டைலை இப்பொழுது கார்த்திக் சுப்புராஜும் பின்பற்றுகிறார் போல !

இதேவேளையில் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான ‘மேயாதமான்’ படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here