உண்மை பிரச்சினையை படமாக தயாரிக்கும் கங்கனா ரனாவத்

0
10

அயோத்தி ராமர் கோயில் வழக்கு ’அபாரஜிதா அயோத்யா’ என்ற தலைப்பில் திரைப்படமாக உருவாகிறது.

கோலிவுட்டில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரனாவத், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான ‘தலைவி’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமாக உருவாகும் முதல் படத்துக்கு ’அபாரஜிதா அயோத்யா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக நடைபெற்று வந்த அயோத்தியா ராமர் கோயில் வழக்கு பற்றிய படம் இது. அடுத்த வருடம் தொடங்கவுள்ள இந்தப் படத்தின் திரைக்கதையை பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜேயந்திர பிரசாத் எழுதி உள்ளார்.

இந்த படம் பற்றி கங்கனா கூறியதாவது:- பல நூறு வருடங்களாக ராமர் கோயில் பற்றிப் பேசி வருகின்றனர். 80களில் பிறந்த ஒரு குழந்தையாக, தொடர்ந்து அயோத்தியா என்ற பெயரை நான் எதிர்மறையான தன்மையில் தான் கேட்டு வருகிறேன். ஒரு அரசன் பிறந்த ஒரு நிலப்பகுதி. அவன் தியாகங்களின் மறுவடிவமாக இருந்தவன். சொத்து பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறான்.

இந்த வழக்கு இந்திய அரசியலின் அடையாளத்தை மாற்றிவிட்டது. இந்த தீர்ப்பு பல நூறு வருட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அதே நேரத்தில் இந்தியாவின் சமத்துவ ஆன்மாவையும் காத்துள்ளது.

‘அபாரஜிதா அயோத்தியா’ படம், நாயகன் எப்படி கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருப்பதில் இருந்து கடவுள் நம்பிக்கை பெறுகிறான் என்ற பயணமே.

ஒரு வகையில் இது என் தனிப்பட்ட பயணத்தின் பிரதிபலிப்பும் கூட. எனது முதல் தயாரிப்புக்கு இது சரியாக இருக்கும் என்று முடிவு செய்தேன்’ என்கிறார் கங்கானா.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here