காஜலுக்கு டும் டும் டும் – யார் அந்த அதிர்ஷ்டசாலி ?

0
56

நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் நின்று கைவிரல்களை இதய வடிவத்தில் விரித்து புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோலிவுட்டில் இந்த வருடம் காஜல் நடிப்பில் வந்த கோமாளி படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இப்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.

34 வயது ஆகும் காஜலுக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் புகைப்படம் மூலம் தனக்கு திருமணம் ஆகப்போவதை உணர்த்தி உள்ளார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

இருப்பினும், சம்பந்தப்பட்ட அந்த தொழிலதிபர் யார் என்ற விபரம் இன்னும் கிடைக்கவில்லை.

View this post on Instagram

#Decembervibes 💕

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here