கனவு காணும் காஜல் – நிறைவேறுமா ?

0
16

தென்னிந்திய சினிமாவில் இதுவரை கன்னட மொழியில் (சாண்டல் வுட்) நடிக்காத காஜல், முதன்முறையாக நடிக்க இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- “கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகியும் அதிக பட வாய்ப்புகள் வருகின்றன.

கடந்த 10 வருடத்தில் எனக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்களை திரையில் பார்க்கும் ரசிகர்களும் என்னோடு வேலை செய்பவர்களும் புரிந்து இருப்பார்கள்.

சவால்களை தைரியமாக ஏற்றுக்கொள்ளும் சக்தி, சினிமா தந்த அனுபவத்தால் வந்திருக்கிறது. அதே மாதிரி கதை தேர்விலும் அனுபவம் வந்திருக்கிறது.

50 படங்களை தாண்டி விட்டேன். 100 படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது லட்சிய கனவாக இருக்கிறது. நமக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் இருந்தால் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியாது.

தற்போது உபேந்திரா கதாநாயகனாக வரும் கப்சா என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். கன்னடத்தில் இது எனக்கு முதல் படம். ஆனாலும் இந்த படத்தை 7 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.”

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த வரலாறு படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தவர் தான் உபேந்திரா. இவர் கன்னட சூப்பர் ஸ்டார் என்பது மேலதிக தகவல்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here