கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு தான் சம்பளமா? அட்லீயே இத்தனை கோடி வாங்குகிறாரே..

0
48

தீபாவளிக்கு ரிலீஸ் ஆன பிகில் மற்றும் கைதி ஆகிய படங்களுக்கு இடையே வித்யாசம் மிக அதிகம். பிகில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது, கைதி மிக சிறிய பட்ஜெட்டில் படமாக்கப்பட்டது. ஒன்று மாஸ் மசாலா படம், மற்றொன்று ராவான திரில்லர் படம்.

இந்த இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பெரிய வித்யாசம் உள்ளது. பிகில் பல நாட்களுக்கு முன்பே 250 கோடியை கடந்துவிட்டது. ஆனால் தற்போது தான் கைதி 100 கோடியை தொட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த படங்களில் இயக்குனர்கள் வாங்கிய சம்பளம் பற்றிய விவரங்களும் வெளிவந்துள்ளன. பிகில் படம் இயக்கிய அட்லீ டாப் இயக்குனர்களில் ஒருவர் என்பதால் அவர் 20 கோடி ரூபாய்க்கும் அதிகம் சம்பளம் வாங்கியுள்ளார்.

ஆனால் கைதி இயக்குனர் லோகேஷுக்கு இது இரண்டாவது படம் தான். அதனால் அவருக்கு வெறும் 50 லட்சம் ருபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here