சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் ஜோதிகா?

0
41

ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் ‘சந்திரமுகி’. பி.வாசு இயக்கிய இந்த படம் 890 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்தில் ஜோதிகாவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது. அத்துடன் அவருக்கு பல விருதுகளும் கிடைத்தன. சமீபத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

பி.வாசுவே இந்த படத்தையும் இயக்குவதாகவும், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிப்பதாகவும் செய்தி வெளியானது. இந்நிலையில், இரண்டாம் பாகத்திலும் ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here