ஜர்னலிஸ்டாக நடிக்கும் யாஷிகா ஆனந்த் – இவர் படத்தில் தான் ?

0
20

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான ஆரவ், நடிப்பில் தற்போது ‘ராஜபீமா’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இதில் இவருக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்து வருகிறார்.

சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரித்துள்ள இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் நாசர், ஷயாஜி ஷிண்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஓவியா இப்படத்தில் ஏற்கனவே இணைந்து ஒரு பாடல் காட்சிக்கு நடனம் ஆடியுள்ளநிலையில், பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்த்தும் இப்படத்தில் இணைந்திருக்கிறார்.

ஜர்னலிஸ்டாக நடிக்கும் யாஷிகா ஆனந்த்தின் கதாபாத்திரம் படத்திற்கு திருப்பு முனையாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சைமன் கிங் இசையமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here