பக்காவாக களமிறங்கும் ஜீவனின் பாம்பாட்டம்

0
65

நான் அவனில்லை, திருட்டுப்பயலே படங்களின் மூலம் தமிழ்திரையுலகில் பிரபலமானவர் ஜீவன்.

இவரின் எதார்த்தமான வசன உச்சரிப்புகள், நடிப்பு என பலவற்றை இவருடைய பலமாக சொல்லலாம்.

ஆனால், இடைப்பட்ட காலங்களில் ஜீவனுடைய திரைப்படங்கள் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு வெற்றி அடையவில்லை.

இப்பொழுது விசி.வடிவுடையான் இயக்கத்தில் பாம்பாட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜீவன்.

இப்படம் 5 மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறதாம். கிராபிக்ஸ் காட்சிகள் முதல் அனைத்து அம்சங்களும் பக்காவாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் ஜீவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here