ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் ! காரணம் இது தான்

0
25

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 25-வது படமாக ‘நோ டைம் டூ டை’ தயாராகி வருகிறது.

இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார்.

ராய்ல்ப் பியென்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், ஜெப்ரி ரைட் உள்பட மேலும் பலர் நடிக்கும் இந்த படத்தை கேரி ஜோஜி புகுனகா இயக்கியுள்ளார்.

இந்தப் படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்காவிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி இங்கிலாந்திலும், நவம்பர் 25-ந் தேதி அமெரிக்காவிலும் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here