கொரானா வைரசால் ஜேம்ஸ் பாண்டுக்கு கடும் பாதிப்பு !

0
40

ஹாலிவுட் படங்களுக்கு சீனாவில் பெரிய மார்க்கெட் உள்ள நிலையில் ஜேம்ஸ் பாண்ட் படமான நோ டைம் டூ டை படத்துக்கு சீனாவில், கொரானா வைரசால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்போதே ஆயிரக்கணக்கான தியேட்டர்களை ஒதுக்கீடு செய்து விளம்பரப்படுத்தும் பணி நடக்கிறது.

படம் ரிலீசுக்கு முந்தைய நாள் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

அதில் டேனியல் கிரெய்க் உள்பட படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் அனைவரும் பங்கேற்க இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர்.

கொரோனா வைரஸ் உயிர்ப் பலியால் சீனாவே நிலை குலைந்துள்ள நிலையில் டேனியல் கிரெய்க் உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சிறப்பு காட்சிக்கும் தடைவிதித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here