இருட்டு அறையில் முரட்டு குத்து 2 துவங்குகிறது.. ஹீரோ,ஹீரோயின் முழு விவரம்

0
109

தமிழ் சினிமாவில் பெரிய பெரிய பரபரப்பை ஏற்படுத்திய படங்களில் இருட்டு அறையில் முரட்டு குத்து படமும் ஒன்று. வழக்கமாக ஆபாச படங்களுக்கு வைக்கப்படும் பட பெயரில் ஒரு முன்னணி ஹீரோ நடித்தது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

அடல்ட் காமெடி படமான இது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலும் குவித்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றி சில மாதங்கள் முன்பே அறிவித்தனர். அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்கிற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அந்த படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமாரே இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம். அவருக்கு ஜோடியாக கரிஷ்மா மற்றும் அக்ரிதி என்ற நடிகைகள் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். அவர்கள் மும்பையை சேர்ந்த நடிகைகள்.

“இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிக்க சில ஹீரோக்களிடம் பேசினேன். யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. பயப்படுகிறார்கள். அதனால் நானே நடிக்கலாமே என நண்பர்கள் கூறினார்கள். அதை ஏற்று நானே ஹீரோவாக நடிக்கலாம் என முடிவெடுத்துவிட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here