இந்தியன் 2 – கசிந்தது பிரியாவின் கேரக்டர்

0
20

இந்தியன் 2 படத்தில் பிரியா பவானி சங்கரின் கதாப்பாத்திரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

கமல், ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாகவும் காஜல் 85 வயது கமலின் தோழியாகவும் நடிக்கிறார்.

இவர்களுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதற்கிடையே, பிரியா பவானி சங்கரின் கதாப்பாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன் முதல் பாகத்தில் சேனாதிபதியின் மனைவியாக சுகன்யா நடித்திருந்தார். இவரது வேடத்தில் தான் பிரியா பவானி சங்கர் நடிக்க இருக்கிறாராம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here