கோட்டை விட்ட இலியானா

0
27

நீண்ட இடைவேளைக்கு பின்பு, கடந்த வருடம் அமர் அக்பர் அந்தோனி என்கிற படத்தின் மூலம் டோலிவுட்டில் நுழைந்தார்.

அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தெலுங்கில் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என எதிர்பார்த்தார் இலியானா.

தற்போது மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுன் படங்களில் வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் கதாநாயகியாக அல்ல, ஒரு பாடலுக்கு மட்டுமே ஆடுவதற்கு வாய்ப்பு வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியான இலியானா, தனது நிலைமை இன்னும் அந்த அளவுக்கு கீழே போகவில்லை என்று கூறி, தேடி வந்தவர்களை திருப்பி அனுப்பிவிட்டாராம்.

மேலும் கதாநாயகியாக வரும் வாய்ப்புகளை மட்டுமே ஏற்றுக் கொள்வேன் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் இலியானா.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here