அவெஞ்சர்ஸ் நடிகரை தாக்கிய கொரோனா !

0
12
LONDON, ENGLAND - MAY 08: Idris Elba poses in the Winners room at the House Of Fraser British Academy Television Awards 2016 at the Royal Festival Hall on May 8, 2016 in London, England. (Photo by Stuart C. Wilson/Getty Images)

ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த ஐடிரிஸ் எல்பா 47, என்ற நடிகர் கடந்த வாரம் தனது நண்பர் ஒருவரை சந்தித்துள்ளார்.

அந்த நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஐடிரிஸ் முன்னெச்சரிக்கையாக தனக்கும் சோதனை செய்துள்ளார். தற்போது அவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக சோதனை முடிவுகள் தெரிவித்துள்ளன.

ஆனால் இதுவரை எந்தவித அறிகுறியும் இல்லை; தான் எப்போதும் போல நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனது உடல்நிலை குறித்து அடுத்தடுத்து தெரிவிப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

தற்போது ஐடிரிஸ் தனது மூன்றாவது மனைவியான ‌ஷப்ரினாவுடன் வசித்து வருகிறார். அவரது மனைவிக்கு இன்னும் சோதனை செய்யவில்லையாம்.

மேலும் மக்கள் அனைவரும் இதுகுறித்து மிக அக்கறையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here