ஹாலிவுட் மாஸ் ஹீரோ தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி

0
27

ஹாலிவுட்டில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் வில் ஸ்மித். இவர் தற்போது ஸ்டாண்டப் காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார்.

திஸ் ஜோகா என்ற இந்த நிகழ்ச்சியை இணைந்து தயாரித்திருப்பவரும் வில் ஸ்மித்தான். இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்ற மற்றும் வளர்ந்து வரும் நகைச்சுவையாளர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டண்ட் அப் காமெடி மீது வில் ஸ்மித்துக்கு அன்பும், மரியாதையும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்தத் தொடருடன் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த, பல்வேறு பின்னணியைச் சேர்ந்த நகைச்சுவைத் திறமைகளைக் கண்டுபிடித்து, அவர்களிடம் நிறையத் தெரிந்து கொள்வோம் என நம்புவதாக நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here