ஹீரோ படக்குழுவின் வீடியோ கேம் புரமோஷன்

0
19

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படத்தின் புரமோஷன் பணிகள் வீடியோ கேம் முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் ஹீரோ படத்தை இயக்குகிறார்.

சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், இவானா நாயகிகளாக நடிக்கிறார்கள்.
அர்ஜூன், ரோபோ சங்கர், பிரேம் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பை கவனிக்க, 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா, கே.ஜி.ஆர். ஸ்டூடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஹீரோ படக்குழு வித்தியாசமான முறையில் புரமோஷன் வேலைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இதற்காக பிரத்யேக வீடியோ கேம் ஒன்றை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த வீடியோ கேம் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் சமீபத்திய ஆண்டுகளில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான முகமூடி படமும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் தான். தற்போது மீண்டும் சிறுஇடைவேளைக்கு பின்பு ஹீரோ படம் உருவாகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here