கதாநாயகனாக களமிறங்கும் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி !

0
17

லெஜெண்ட் சரவணா ஸ்டோர் விளம்பர படங்களில் நடித்து வந்த அதன் உரிமையாளர் சரவணன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

இந்த புதிய படத்திற்கான துவக்க விழா, ஏவிஎம் ஸ்டூயோவில் எளிமையாக நடந்தது.

இந்த பூஜையில் மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கலந்து கொண்டார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி இந்த படத்தை இயக்க உள்ளார்.

முக்கிய கதாப்பாத்திரத்தில் பிரபுவும் கதாநாயகியாக மிஸ் இந்தியா ஈத்திகாதிவாரியும் நடிக்கிறார்கள்.

எந்திரன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சரவணா ஸ்டோர் தயாரிக்கிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here