ஜிப்ஸி ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
8

கோலிவுட்டில் குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜூ முருகன் தற்போது இயக்கி இருக்கும் படம் ‘ஜிப்ஸி’.

ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம், நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை
மையமாக வைத்து தயாராகியுள்ளது.

தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் அடுத்த வருடம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 24ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஜீவாவுடன் சன்னி வைய்யன், லால் ஜோஸ், பாடகி சுசீலா ராமன், விக்ரம் சிங், கருணா பிரசாத் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here