கீர்த்தி சுரேஷின் குட் லக் சகி டீஸர் வெளியானது..!

0
85

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநதி படத்தின் வெற்றிக்கு பிறகு உலகளவில் பிரபலமான நடிகையாகிவிட்டார். சிறந்த நடிப்பிற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. அதன் பின் பல பாலிவுட் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் பெண்குயின் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள கீர்த்தி சுரேஷ், சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்த லாக்டவுனை சரியாக பயன்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் வயலின் வாசிப்பதில் ஆர்வம் காட்டுகிறார் கீர்த்தி. மேலும் வயலின் வாசிக்கும் வீடியோவையும் பகிர்ந்தார்.

தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் குட் லக் சகி டீஸர் வெளியாகியுள்ளது. இயக்குனர் நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆதி மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்தில் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். நாடக கலைஞராக ஆதி நடித்துள்ளார். இந்நிலையில் குட் லக் சகி படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் மிஸ் இந்தியா படத்தில் நடித்துள்ளார். ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மிஸ் இந்தியா படத்தை நரேந்திர நாத் இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார். ஹீரோயினை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் ஹோம்லியாகவும், மார்டனாகவும் தோன்றியுள்ளார் கீர்த்தி. மிஸ் இந்தியா டீஸர் மற்றும் பாடல் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்காக தான் தனது உடல் எடையை கீர்த்தி குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர்த்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சூரி, பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ், குஷ்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதெராபாத் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்தது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here