நீங்களே நினைக்கலைன்னா … அப்புறம் என்ன ? சக நடிகைகளை தாக்கி பேசிய கங்கானா ரெனாவத்

0
25

பெண்கள் நீங்கள் சக்தி வாய்ந்தவர்கள் என நீங்களே நினைக்காவிட்டால், யாராலும், எந்த படத்தாலும் உங்களை அதிகாரமிக்கவர்களாக மாற்ற முடியாது என்று கங்கானா ரெனாவத் கூறியிருக்கிறார்.

கங்கனா நடித்துள்ள பங்கா திரைப்படம் அடுத்த மாதம், குடியரசு தினத் தன்று ரிலீசாகிறது. இதில் அவர் ஜெயா எனும் கதாபாத்திரத்தில் கபடி வீராங்கனையாக நடித்துள்ளார்.

ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கங்கானா, ஆணுக்கு நாம் சமம் என நினைக்க வேண்டும். ஆண்களுக்கு எந்த விதத்திலும் நான் குறைந்தவள் இல்லை என ஒவ்வொரு பெண்ணும் தனக்கு தானே சொல்லிக்கொள்ள வேண்டும்’ என கூறினார்.

மேலும் ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் சம்பளம் கேட்பது தவறு என கூறியிருந்தார்.

அதேபோன்ற கருத்தை, ஆலியா பட்டும், சோனாக்‌ஷி சின்காவும் கூறியிருந்தனர். அவர்களைத் தான் பெயர் குறிப்பிடாமல் கங்கனா சாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here