பிலிம் நியூஸ் ஆனந்தன் பற்றி தெரியுமா ?

0
22

தமிழ் திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என புகழப்பட்ட  பிலிம் நியூஸ் ஆனந்தன் பற்றி சினிமா வட்டாரத்தில் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

திரைப்படத் துறையில் மக்கள் தொடர்புப் பணியில் இருந்த ஆனந்தன் தமிழ்த் திரைப்பட நடிகர், நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என அனைத்துத் திரைப்படத் துறையினர் குறித்த தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தார்.

சென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இவரிடமிருந்த தமிழ்த்திரைப்பட செய்திக் கோப்புகளையும் ஆவணங்களையும் தொகுத்து நூலாக வெளியிட தமிழ்நாடு அரசு நிதியுதவி செய்தது.

“சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் இந்நூல் வெளியிடப்பட்டது.

தமிழக அரசின் கலைமாமணி விருதை வென்றுள்ள இவர், சென்னை, கோடம்பாக்கத்தில் 2016, மார்ச் 21 அன்று காலமானார்.

இவரது நினைவு நாளில் இந்த தகவலை பகிர்வதில் தமிழ் சினிமா பெருமிதம் கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here