ஹாலிவுட்டில் கலக்கிய பிரபல இந்திய நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

0
7

பிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் ஹாலிவுட்டில் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ஸ்லம்டாக் மில்லியனர், லைப் ஆஃப் பை, ஜுராசிக் வேர்ல்டு படங்களை கூறலாம்.

Neuroendocrine Tumor என்ற அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இர்பான் கான், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பெருங்குடலில் தொற்று ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார்.

இர்பான் கானின் இறப்பு செய்தியை அறிந்து திரையுலம் அதிர்ச்சியடைந்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு தான் அவரது தாயார் ஜெய்ப்பூரில் மரணமடைந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக தாயின் இறுதி சடங்கில் இர்பான் கானால் கலந்துகொள்ள முடியவில்லை.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 1967ஆம் ஆண்டு இர்பான் கான் பிறந்தார். 1985ஆம் ஆண்டு ஹிந்தி சீரியலில் நடிக்க ஆரம்பித்த இவர், 1988ஆம் ஆண்டு சலாம் பாம்பே படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

திறமையான நடிகர் என்று பெயர் பெற்ற இர்பான், 2011ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். 2018ஆம் ஆண்டு அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here