ஷிமோகா சிறையில் முக்கிய காட்சிகள் – விஜயை காண திரளும் கூட்டம்

0
34

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு டெல்லி உள்ளிட்ட சில பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்தது. தற்போது கர்நாடகாவில் உள்ள ஷிமோகா சிறையில் முக்கிய காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

இதற்காக விஜய் அங்குள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். விஜய்யை காண தினமும் ஓட்டல் முன்பும் சிறைச்சாலை எதிரிலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி மணிக்கணக்கில் காத்து நிற்கிறார்கள். அவர்களை சந்திக்க விஜய் நேரம் ஒதுக்குகிறார்.

கர்நாடகாவிலும் விஜய்க்கு ஏராளமாக ரசிகர்கள் திரள்வது பலருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here