பிரபல ஹாலிவுட் நடிகர் காலமானார்

0
15

ஹாலிவுட்டில் 1960-களில் முன்னணி நடிகராக வலம் வந்த பிரபல நடிகர் கிரிக் டக்ளஸ் 103 வயதில் மரணமடைந்துள்ளார்.

ஹாலிவுட் திரையுலகில் 1950 மற்றும் 60-களில் முன்னணி நடிகராக இருந்தவர் கிரிக் டக்ளஸ்.

அவர் நடிப்பில் 1974-ல் வெளிவந்த அவுட் ஆப் த பாஸ்ட், சாம்பியன் (1949), த பேட் அண்ட் த பியூட்டிபுல் (1952), லஸ்ட் ஆப் லைப் பாத்ஸ் ஆப் குளோரி, த வைக்கிங், செவன் டேஸ் இன் மே, சேட்டர்ன் 3, டாப் கய்ஸ் உள்பட பல படங்கள் வெற்றி பெற்றன.

ஸ்கேல்வாக் என்ற படத்தை டைரக்டு செய்துள்ளார். சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார்.

கடைசியாக கிரிக் டக்ளஸ் நடிப்பில் 2008-ம் ஆண்டு எம்பயர் ஸ்டேட் பில்டிங் மர்டர்ஸ் என்ற டி.வி தொடர் வெளியானது.

அமெரிக்க திரைப்பட இன்ஸ்ட்டியூட் வெளியிட்ட அமெரிக்க சிறந்த நடிகர்கள் பட்டியலில் 17-வது இடத்தில் இருந்தார்.

50 வருடங்களாக சினிமா துறையில் ஆற்றிய சாதனைக்கான இவருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

கலிபோர்னியாவில் உள்ள பிரேவரி ஹில்ஸ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த கிரிக் டக்ளஸ் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

கிரிக் டக்ளஸ் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here