திரௌபதி திரை விமர்சனம்

0
167

சிலம்ப கலைஞராக வரும் நாயகன் ரிச்சர்டு, அவர் தன் மாமன் மகளான திரௌபதியை மணமுடித்துக்கொள்கிறார். இவரின் சித்தப்பா கிராமத்தில் மரியாதைக்குரிய தலைவராக இருக்கிறார். இவருக்கும் ஒரு மகள்.

கிராமத்தில் அழகாக இவர்களின் வாழ்க்கை செல்கிறது. திரௌபதி கிராம மக்களின் நலத்திற்காக பல விசயங்களை செய்து வருகிறார்.

ஊரில் குளிர்பான கம்பெனிக்காக ஒரு கும்பல் பித்தலாட்டத்தில் ஈடுபடுகிறது. கிராம நலனை பாதிக்கும் இந்த விசயத்திற்கு ஊரும் திரௌபதி குடும்பமும் எதிர்த்து நிற்கிறது.

இதற்கிடையில் கிராமத்தலைவரின் மகள் பதிவு திருமணம் செய்துகொண்டதாக செய்தி வர அவர் உயிர் விடுகிறார். மற்றொரு நாள் எதிர்பாராத விதமாக திரௌபதிக்கும் அவரின் தங்கையும் கொலை செய்ய திட்டம் தீட்டப்படுகிறது.

சிறைக்கு சென்ற ரிச்சர்டு என்ன ஆனார், திரௌபதி ஆபத்திலிருந்து உயிர் தப்பினாரா, அவரின் தங்கைக்கு என்ன நேர்ந்தது என்பதை பேசுகிறாள் இந்த திரௌபதி.

ரிச்சர்டு அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். ஷாலினியின் தம்பி அஜித்தின் மைத்துனர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

ஏற்கனவே மலையாளம், கன்னடம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இப்படத்தின் மூலம் அவரின் எதிர்பார்ப்பு கூடியது. ஒரு கலைஞராகவும் மனைவி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கணவராக அவர் நடித்திருக்கிறார்.

சாதிக்க அவருக்கு இப்படம் ஒரு சரியான கதைக்களம்.

ஷீலா ராஜ்குமார் அழகிய தமிழ் மகள் சீரியலில் நீங்கள் பார்த்திருக்கலாம். பின் டூ லெட், அசுரவதம், நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்திருந்தார்.

திரௌபதியாக இப்படத்தில் அவர் பேச்சு, செய்கை மூலம் விளாசி எடுக்கிறார். கேரக்டருக்கேற்ற நடிப்பு.

கருணாஸ் ஒரு பொது நல வழக்கறிஞராக சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதும், திரௌபதியின் நியாயத்திற்காக போராடுவதும் என விடாமல் வசனம் பேசுகிறார்.

காதல் விசயத்தில் ஆணவக்கொலை என்னும் சமூக அவலத்தை தைரியமாக பேசியதற்கு இயக்குனர் மோகனுக்கு கோடி வாழ்த்துக்கள்.

மனோஜ் நாராயணனின் ஒளிப்பதிவு, தேவராஜின் எடிட், ஜுபின் இசை என எல்லாமே படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here