கணவரை விவாகரத்து செய்தார் நடிகை ஸ்வேதா பாசு

0
48

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது பெற்ற நடிகை ஸ்வேதா பாசு, தமிழில் உதயா ஜோடியாக ரா ரா, கருணாஸ் ஜோடியாக சந்தமாமா படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்தி பட இயக்குனர் ரோகித் மிட்டலுக்கும் ஸ்வேதா பாசுவுக்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.

மகிழ்ச்சியாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஒரு வருடத்திலேயே புயல் வீச தொடங்கி உள்ளது.

இந்நிலையில் கணவரை பிரிந்து விட்டதாக ஸ்வேதா பாசு அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:- கணவர் ரோகித்தை நான் பிரிந்து விட்டேன். பல மாதங்களாக யோசனை செய்த பிறகே இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம். பிரிய வேண்டும் என்ற முடிவை சேர்ந்தே எடுத்தோம் என்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் பாலியல் வழக்கில் ஸ்வேதா பாசு கைதான சம்பவம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here