அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல் மேஷ்அப் வீடியோவை பகிர்ந்த இயக்குனர்!

0
82

நடிகர் அஜித்குமார் மே 1ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கொரோனாவால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என அவர் ரசிகர்களை கேட்டுக்கொண்டார்.

எனினும் சமூக வலைத்தளத்தில் அஜித் பிறந்தநாளுக்கென பொதுவான DP ஒன்றை ரசிகர்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். இதனை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் அஜித் பிறந்தநாள் மேஷ்அப் வீடியோவை, இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் விவேகம் படத்தில் வரும் நெவர் எவர் கிவ் அப் என்ற வசனத்தை குறிப்பிட்டு, COVID19 நோயை எதிர்த்து நாம் நம்பிக்கையுடன் போராடி வருகிறோம். இந்த போராட்டம் அந்நோயை ஒழித்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here