நீங்கள் இறந்த செய்தியை கேட்டு உடைந்துவிட்டேன்.. இர்பான் கானுக்கு இரங்கல் தெரிவித்த இயக்குனர்!

0
15

பிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இர்பான் கான் கடைசியாக Angrezi Medium என்ற ஹிந்தி படத்தில் நடித்திருந்தார். ஹோமி அடஜானியா என்பவர் இப்படத்தினை இயக்கியிருந்தார். இந்நிலையில், இர்பான் கானின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ஹோமி அடஜானியா, உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘அதில் உங்களின் இறப்பு குறித்து நாம் ஒருமுறை நினைத்து சிரித்துள்ளோம் எனவும் அதை நான் எதற்காக செய்தேன் என தெரிவில்லை, ஆனால் தற்போது உங்கள் இறப்பு குறித்த செய்தியை கேட்டதும் உடைந்து போயுள்ளேன்.

நான் உங்கள் நண்பன் என நினைப்பதில் பெருமைக்கொள்கிறேன் எனவும் நீங்கள் இனி ஒரு சிறந்த நட்சத்திரமாக இருக்கவேண்டியது இல்லை, ஏனெனில் நீங்கள் இந்த உலகில் உள்ள அனைத்தையும் விடவும் பிரகாசமாக இருந்துள்ளீர்கள்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here