தாராள பிரபு திரை விமர்சனம்

0
129

ஃபுட்பால் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டும் ஹீரோ ஹரிஷ் கல்யாண் என்கிற பிரபு  வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளை.

பியூட்டி பார்லர் அம்மாவும் இயற்கை மருத்துவம் பாட்டியும் தான் இவரின் அழகான உலகம்.

வேலையில்லாமல் இருந்தாலும் ஜாலியான இளைஞராக சுற்றி வரும் இவர், ஹீரோயினை சந்திக்க காதல் துளிர் விடுகிறது.

இதற்கிடையில் செக்சாலஜி டாக்டகராக இருக்கும் காமெடி நடிகர் விவேக் குழந்தை செல்வம் வேண்டும் பெற்றோர்களுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தையை கொடுக்க ஆரோக்கியமான விந்தணுவுள்ள ஒரு டோனரை தேடி அலைகிறார்.

எப்படி அதற்கு சரியான நபர் ஹரிஷ் கல்யாண் என அவரின் பின்னால் அலைந்து திரிந்து அவரை தானம் செய்ய வைக்கிறார்.

காதல் திருமணம் கைகூடினாலும் கணவன் மனைவி இருவருக்கிடையிலும் மனக்கசப்பு, இதற்கிடையில் குழந்தை தத்தடுப்பு என வாழ்க்கை செல்ல ஹரிஷின் வாழ்க்கையில் குழந்தை செல்வம் விசயம் ஒரு எதிர்பாராத பிரச்சனை.

இருவரும் சேர்ந்தார்கள், விந்தணு தானம் செய்பவராக இருந்த ஹரிஷ்க்கு எதுவும் உடலில் பிரச்சனையா, இல்லை வேறெதுவுமா பிரபுவாக இருந்தவர் எப்படி அவர் தாராள பிரபுவாக மாறினார் என்பதே இந்த கதை.

ஹரிஷ் கல்யாணுக்கு ரொமான்ஸ் படங்களாக தொடர்ந்து அமைந்து வருகிறது.

வழக்கமான காதல், பிரிவு என்பதிலிருந்து சற்று மாறுபட்டு விந்தணு தானம் செய்பவராக அவர் தேர்வு செய்த இந்த கதை கை கொடுத்துவிட்டது. சிம்பிளான, ஸ்டைலிஷான நடிப்பு ஹரிஷ்.

ஹீரோயின் தான்யா ஹோப், ஆரம்பத்தில் இவர் ஹரிஷ்க்கு இந்த படத்தில் செட்டாவாரா என்று தோன்றினாலும் ஏற்ற ஜோடிதான் என நம் மனதை மாற்றும் படி நடித்திருக்கிறார்.

படத்தில் முக்கியமனாவரே டாக்டர் கண்ணதாசனாக படம் முழுக்க நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் காமெடி நடிகர் விவேக்.

இக்கால தலைமுறைக்கு ஏற்றபடியான காமெடியில் டீசண்டான அடல்ட் காமெடியை மிக்ஸ் செய்து அவ்வப்போது சின்ன சின்ன டோஸ் கொடுப்பது ரசனை.

அதுவும் காமெடி மூலம் தன் வயதை குறைத்து இளைஞராக ஈர்த்துவிடுகிறார்.

இப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார் இயக்குனர் கிருஷ்ணா.

பாலிவுட்டில் ஹிட்டான விக்கி டோனர் என்ற ஹிட் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி படத்தை கொடுத்துள்ளார்.

தெருவுக்கு தெரு குழந்தையின்மை மருத்துவமனையின் வியாபாரம் அதிகரித்துள்ள இக்காலத்தில் விந்தணுவின் முக்கியத்துவத்தையும், தாம்பத்ய வாழ்கையின் ஆரோக்கியத்தை சிம்பிளாக எடுத்துசொல்லியுள்ளார்.

மொத்தத்தில் தாராள பிரபு, சினிமாவில் தாராளமாக வசூல் செய்ய வாய்ப்புகள் அதிகமே !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here