தொடர் வெற்றிகள் – திருப்பதியில் தனுஷ் சாமி தரிசனம்

0
19

நடிகர் தனுஷ் நடித்த அசுரன் படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் மற்றும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என இரு படங்களில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்து அந்தராங்கி ரே எனும் இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

அசுரன் படம் வெற்றி அடைந்தால், திருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசிப்பதாக வேண்டி இருந்தாராம். வேண்டுதலை நிறைவேற்ற, நடிகர் தனுஷ் குடும்பத்தினருடன், திருப்பதி திருமலைக்கு சென்று வெங்கடாசலபதியை தரிசனம் செய்து திரும்பி இருக்கிறார்.

மனைவி ஐஸ்வர்யா, சகோதரர் செல்வராகவனுடன் திருப்பதி சென்ற அவரை, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, சாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

தரிசனம் முடித்து திரும்பிய அவரை, ரங்க நாயகர் மண்டபத்தில் அமர வைத்து, தேவஸ்தான அதிகாரிகள், ஏழுமலையான் பிரசாதம், சே‌ஷ வஸ்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here