ஆடுகளம் படத்திற்கு பின்பு மீண்டும் மதுரை இளைஞனாக நடிக்கும் தனுஷ் !

0
16

பாலிவுட்டில் தனுஷ் ராஞ்சனா, ஷமிதாப் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்குகிற புதிய இந்தி படமொன்றில் நடிக்கிறார் தனுஷ்.

இவருக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் மகள் சாரா அலிகான் நடிக்கிறார். அக்‌ஷய்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். படத்துக்கு ‘அத்ரங்கி ரே’ என்று பெயரிட்டுள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை தமிழிலும் வெளியிடுகிறார்கள்.

இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் தனுஷ் மதுரையை சேர்ந்த இளைஞனாக நடிக்கிறார்.

மேலும் இதன் கதை வட இந்தியா மற்றும் தென்னிந்தியாவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை சாரா அலிகான் இதில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

இத்திரைப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here