தனுஷ் படத்தின் காப்பியா சைக்கோ ? உதயநிதி விளக்கம்

0
20

சைக்கோ படத்தில் அதிதி ராவ் தான் என்னுடைய ஜோடி, ஆனால் எனக்கும் அவருக்கும் 2 நாட்கள் தான் படப்பிடிப்பு இருந்தது. அப்படியொரு ஒரு காதல் கதை இது.

இந்தப் படத்தில் ராஜுக்கும் அவருக்கும் தான் கெமிஸ்ட்ரி அதிகம். கடைசியில் அவரிடமே சாவியைக் கொடுத்துவிட்டு என்னை டம்மி ஆக்கிவிடுவார்கள்.

அப்படியே ‘காதல் கொண்டேன்’ படம் தான். அதில் தனுஷ் தான் கடத்திக்கொண்டு போவார். இறுதியில் அவர் இறந்துவிடுவார். அவர் தான் படத்தின் நாயகன். அப்படிப் பார்த்தால் படத்தில் ராஜ் தான் ஹீரோ. நான் அவருடன் நடித்துள்ளேன்.

அன்றிலிருந்தே ‘சைக்கோ 2’ பண்ணுவோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கண்டிப்பாகப் பண்ணுவோம்.

இந்தப் படத்தின் வெற்றிக்காக மிஷ்கின் சாருக்கு ரொம்பவே கடமைப்பட்டு இருக்கேன். கண்டிப்பாக ‘சைக்கோ 2’ நடக்கும் என நம்புகிறேன் என்று படத்தின் நாயகன் உதயநிதி, வெற்றி விழாவில் பேசியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here