குட்டி இயக்குனருடன் இணையும் தனுஷ்

0
54

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பட்டாஸ்’ திரைப்படம் பொங்கல் தின விடுமுறையில் ரிலீசாக இருக்கிறது.

அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் D40 படத்தில் நடித்துள்ளார்.

பின்னர் பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ், ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்திலும் தொடர்ந்து நடிக்கவுள்ளார்.

இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் D44 படத்தில் தனுஷ் நடிக்கிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

தற்போது இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் ஏற்கனவே யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here