ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ‘தாராள பிரபு’ தயாரிப்பு நிறுவனம்

0
54

மார்ச் 13ஆம் தேதி ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தாராள பிரபு வெளியானது. நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த படம், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன.

இதனால் படக்குழு பெரும் சோகத்தில் உள்ளது. இந்நிலையில் படத்தை தயாரித்த ஸ்கிரீன் சீன் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தாராள பிரபு படத்தை மீண்டும் திரையிடும் நேரத்தில் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும், சட்டத்திற்கு புறம்பாக இந்த படத்தை வேறெந்த வழியிலும் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். இந்த இக்காட்டான சூழல் சீராகி, மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படும்போது தாராள பிரபு படம் திரையிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற விக்கி டோனர் படத்தின் ரீமேக் தான் தாராள பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here