ஏர்போர்ட்டில் கேக் வெட்டிய தீபிகா படுகோனே ! அசத்திய போட்டோ ஜெர்னலிஸ்ட்

0
25

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மியின் கதையை அடிப்படையாகக் கொண்டு சபாக் எனும் படத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

வரும் ஜனவரி 10ம் தேதி சபாக் திரைப்படம் ரிலீசாகிறது. அந்த படத்திற்கான புரொமோஷன் வேலைகளில் படுபிசியாக பல இடங்களுக்கு சுற்றி திரிந்து வருகிறார் தீபிகா படுகோனே.

வின் டீஸல் நடிப்பில் வெளியான டிரிப்பிள் எக்ஸ் 3 படத்தில் நாயகியாக நடித்த தீபிகா படுகோனே, டிரிப்பிள் எக்ஸ் 4ம் பாகத்திலும் அவருக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் (ஜனவரி5)34வது பிறந்த நாளை மும்பையில் கொண்டாட அவரும் அவரது கணவர் மற்றும் நடிகரான ரன்வீர் சிங் இருவரும் மும்பை விமான நிலையத்திற்கு அதிகாலை வந்து இறங்கினர்.

அப்போது, அவருக்காக காத்திருந்த ஒரு புகைப்படக் கலைஞர் சர்ப்ரைஸாக கேக் ஒன்றை தீபிகா படுகோனே வந்து இறங்கியதும் நீட்டினார்.

அந்த புகைப்படக் கலைஞரின் அன்பை பார்த்து ஆச்சர்யமடைந்த தீபிகா படுகோனே, ஏர்போர்ட்டிலே கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here