தர்பார் படத்திற்காக பாடிய திருநங்கைகள்

0
43

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, டிசம்பர் 7-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில், தர்பார் படத்தில் இடம்பெற்றும் ஒரு சிறப்பு பாடலை திருநங்கைகள் மூன்று பேர் பாடியுள்ளனர். படத்தில் இந்த பாடலுக்கு திருநங்கைகள் நடனமாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐதராபாத்தை சேர்ந்த சந்திரமுகி, ரச்சனா, பிரியா ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

இவர்கள் ஸ்பைஸ் கேர்ள்ஸ் எனும் இசை குழுவை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here