தர்பார் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

0
17

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள தர்பார் படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.

தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. மேலும் சும்மா கிழி என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், டிசம்பர் 7ம் தேதி சென்னையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here